spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரஜினியின் 'வேட்டையன்' பட கதை இதுவா?

ரஜினியின் ‘வேட்டையன்’ பட கதை இதுவா?

-

- Advertisement -

ரஜினி தற்போது ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் ரஜினிக்கு மகனாக பகத் பாசில் நடிப்பதாகவும் ராணா வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.ரஜினியின் 'வேட்டையன்' பட கதை இதுவா?லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக
நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விடும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படத்தினை 2020 நாள் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிடப்படவில்லை திட்டமிட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் 'வேட்டையன்' பட கதை இதுவா?மேலும் ரஜினி இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் மையக்கரு என்னவென்றால் போலி என்கவுண்டர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வருகிறதாம். எனவே டிஜே ஞானவேல், ஜெய் பீம் படத்தில் நல்ல கன்டென்ட்டை கொடுத்தது போல் வேட்டையன் படத்திலும் நல்ல கன்டென்ட்டை வைத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ