நடிகர் வடிவேலு ரசிகர்களால் வைகை புயல் என்று கொண்டாடப்படுபவர். இவர் தனது நகைச்சுவை திறமையால் பல ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர். நகைச்சுவை என்றாலே வைகைப்புயல் வடிவேலு தான் நினைவுக்கு வருவார். அப்படி இருந்தவர் ஒரு சில காரணங்களால் சினிமாவை விட்டு சில காலங்கள் விலகியிருந்தார். அதன் பின்னர் நாய் சேகர் ரிட்டன்ஸ், எலி போன்ற படங்களில் நடித்தார். இருப்பினும் வடிவேலுவிற்கு எந்த படமும் பெரிதளவும் கைகொடுக்கவில்லை. அதேசமயம் நடிகர் வடிவேலு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் மாமன்னாக நடித்திருந்தார். இதற்கு முன்னதாக வடிவேலு ஏற்று நடித்த நகைச்சுவை கதாபாத்திரம் போல் இல்லாமல் மாமன்னன் படத்தில் இவருடைய கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து நடிகர் வடிவேலு பிரபுதேவா உடன் இணைந்து லைஃப் பியூட்டி ஃபுல் படத்திலும், பகத் பாசிலுடன் இணைந்து புதிய படம் ஒன்றிலும் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இது ஒரு பக்கம் இருக்க நடிகர் வடிவேலு சின்னத்திரையிலும் களமிறங்கி இருக்கிறார்.
அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். ஆனாலும் வடிவேலுவின் செகண்ட் இன்னிங்ஸ் அவருக்கு பட வாய்ப்புகளை கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு காரணம் என்னவென்று விசாரித்த போது, நடிகர் வடிவேலு தற்போது புதிய படங்களில் நடிப்பதற்கு 6 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம். இதன் காரணமாகவே பல இயக்குனர்கள் தெறித்து ஓடுகிறார்கள் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -