Homeசெய்திகள்சினிமாபாகுபலி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்க போகிறாரா விக்ரம்?

பாகுபலி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்க போகிறாரா விக்ரம்?

-

நடிகர் விக்ரம் தனது கடின உழைப்பினால் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார்.பாகுபலி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்க போகிறாரா விக்ரம்? இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் செய்யப்படாமல் நிலுவையில் இருக்கிறது. அதே சமயம் இவர், பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படமானது வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து நடிகர் விக்ரம், சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விக்ரமின் 62 வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் விக்ரமின் 63வது படத்தை மௌனகுரு, ரசவாதி உள்ளிட்ட படங்களை இயக்கிய சாந்தகுமார் இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது. பாகுபலி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்க போகிறாரா விக்ரம்?இந்நிலையில் நடிகர் விக்ரம், பாகுபலி படத்தின் மூலம் பிரம்மாண்ட வெற்றி கண்ட இயக்குனர் ராஜமௌலியுடன் கூட்டணி அமைக்கப் போவதாக புதிய தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. விக்ரம், ராஜமௌலி கூட்டணி இணையப்போகும் தகவல் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை தெரிந்து கொள்ள படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

MUST READ