பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க விஜய் மில்டன் இந்த படத்தை இயக்கியிருந்தார். படத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் ரிலீஸான நாள் முதலே சர்ச்சை ஒன்றை சந்தித்து வருகிறது. அதாவது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் விஜய் மில்டன் ஆகிய இருவருக்கும் இடையிலான பிரச்சனையில், யாரோ ஒருவர் ஒரு நிமிட காட்சியை தனது அனுமதி இல்லாமல் படத்தில் சேர்த்துவிட்டதாக விஜய் மில்டன் சமீபத்தில் குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்திருந்தார். அதைத் தொடர்ந்து மழை பிடிக்காத மனிதன் படத்தின் துவக்கத்தில் இடம்பெறும் இரண்டு நிமிட காட்சி குறித்து விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கத்தில், “அது நான் இல்லை. இது சலீம் 2 இல்லை” என்று விளக்கம் கொடுத்திருந்தார்.
tnx for the clarification @vijayantony sir. we hav come a long way the journey was so confortable we hav a greater understanding and confortable with each other because of the passion and focus in the craft.
தயாரிப்பாளருக்கும் எனக்கும் இருந்த பிரச்னை @realsarathkumar அவர்கள்… https://t.co/J8RjyB2ekN— sd.vijay milton (@vijaymilton) August 5, 2024
அதற்கு இயக்குனர் விஜய் மில்டன் தனது சமூக வலைதள பக்கத்தில், “தயாரிப்பாளருக்கும் எனக்கும் இருந்த பிரச்சனை நடிகர் சரத்குமார் அவர்களின் தலையீட்டால் தீர்க்கப்பட்டு இன்று முதல் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. குரல் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.
மேலும் விஜய் ஆண்டனியும், மழை பிடிக்காத மனிதன் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பிரச்சனை இன்றுடன் முடிந்து விட்டது எனவும் புதிய அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து படத்திற்கு ஆதரவு தருமாறும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.