spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎனக்கு நானே போட்டி... ஒரே நாளில் பாக்ஸ் ஆபிஸ் மோதல் நடத்தும் 2 விமல் படங்கள்!

எனக்கு நானே போட்டி… ஒரே நாளில் பாக்ஸ் ஆபிஸ் மோதல் நடத்தும் 2 விமல் படங்கள்!

-

- Advertisement -

தனக்குத்தானே பாக்ஸ் ஆபிஸ் மோதல் நடத்த தயாராகி உள்ளார் நடிகர் விமல்.

ஆம், நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள இரண்டு படங்கள் ஒரே நாளில் தியேட்டர்களில் ரிலீசாக இருக்கின்றன.

we-r-hiring

சரவண சக்தி இயக்கத்தில் விமல் ‘குலசாமி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை தன்யா ஹோப் கதாநாயக நடித்துள்ளார். குலசாமி படத்திற்கு விஜய் சேதுபதி வசனங்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு மகாலிங்கம் இசையமைத்துள்ளார்.


மாரடின் நிர்மல் குமார் என்பவர் இயக்கத்தில் ‘தெய்வ மச்சான்’ என்ற படத்திலும் விமல் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நேகாஜா கதாநாயகியாக நடித்துள்ளார். பால சரவணன் இந்தப்  படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

குலசாமி மற்றும் தெய்வமச்சான் இரு படங்களும் ஏப்ரல் 21ஆம் தேதி திரையரங்கங்களில் வெளியாக இருக்கின்றன. எனவே ஒரே நாளில் இரு விமல் படங்கள் சினிமா வட்டாரங்களில் கலகலப்பாக பேசப்பட்டு வருகிறது. சினிமாவில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த விமல் விலங்கு வெப் சீரிஸ்  கம்பேக் கொடுத்தார்.

தற்போது வெளியாகும் 2 படங்களும் அவருக்கு வரவேற்பு பெற்று தந்தால் மார்க்கெட் அமோகம் ஆகும்!

MUST READ