- Advertisement -
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சிபிராஜ். இவர் நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன்துரை, போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
மேலும், இவர் நடிகர் சத்யராஜின் மகனாவார். தந்தை மகன் என இருவரும் சேர்ந்து வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், ஜாக்சன்துரை போன்ற பல படங்களில் நடித்துள்ளனர்.


அதில் சிபிராஜ் மற்றும் சத்யராஜ் இணைந்து நடித்து 2016 ம் ஆண்டு வெளியான “ஜாக்சன்துரை” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.
முதல் பாகத்தை இயக்கிய பி.வி தரணி தரன் இந்த படத்தையும் இயக்குகிறார். இரண்டாம் பாகத்தில் சிபிராஜ் மற்றும் சத்யராஜ் இணைந்து நடிக்க உள்ளார்.
சித்தார்த் விபின் இசையமைக்கும் இந்த இரண்டாம் பாகம் மிக பெரிய பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, ஹிந்தி என ஐந்து மொழிகளில் தயாராக உள்ளது.


