Homeசெய்திகள்சினிமாஇணையத்தை கலக்கும் தலைவர்.... ட்ரெண்டிங் நம்பர் 1- இல் 'ஜெயிலர் 2' ப்ரோமோ!

இணையத்தை கலக்கும் தலைவர்…. ட்ரெண்டிங் நம்பர் 1- இல் ‘ஜெயிலர் 2’ ப்ரோமோ!

-

- Advertisement -

ஜெயிலர் 2 படத்தின் ப்ரோமோ இணையத்தை கலக்கி ட்ரெண்டிங் நம்பர் 1 இல் இருக்கிறது.இணையத்தை கலக்கும் தலைவர்.... ட்ரெண்டிங் நம்பர் 1- இல் 'ஜெயிலர் 2' ப்ரோமோ!

கடந்த 2023ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி சமீப காலமாக ஜெயிலர் 2 படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர். எனவே நேற்று (ஜனவரி 14) பொங்கல் விருந்தாக ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு டீசரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இயக்குனர் நெல்சனின் வழக்கமான பாணியில் இந்த அறிவுப்பு டீசர் நகைச்சுவையான காட்சிகளுடன் வெளியிடப்பட்டிருந்தது. அதே சமயம் இந்த ப்ரோமோவில் நடிகர் ரஜினியின் மாஸான என்ட்ரி அதிரடியான ஆக்சன் காட்சிகளும் அனிருத்தின் மிரட்டலான இசையும் பட்டாசாய் வெடித்தது.இணையத்தை கலக்கும் தலைவர்.... ட்ரெண்டிங் நம்பர் 1- இல் 'ஜெயிலர் 2' ப்ரோமோ! இந்த வெறித்தனமான ப்ரோமோ வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே 7 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இந்நிலையில் இந்த ப்ரோமோ யூடியூபில் ட்ரெண்டிங் நம்பர் 1இல் இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இனிவரும் நாட்களில் ஜெயிலர் 2 படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும் நம்பப்படுகிறது.

MUST READ