Homeசெய்திகள்சினிமாநாளையுடன் ஓராண்டை நிறைவு செய்யும் 'ஜெயிலர்'..... இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வருமா?

நாளையுடன் ஓராண்டை நிறைவு செய்யும் ‘ஜெயிலர்’….. இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வருமா?

-

கடந்த 2023 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். நாளையுடன் ஓராண்டை நிறைவு செய்யும் 'ஜெயிலர்'..... இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வருமா?இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்த நிலையில் அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் தமன்னா, மோகன்லால், சுனில், சிவராஜ் குமார் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ஏகோபித்த வரவேற்பை பெற்று பிரம்மாண்ட வெற்றி பெற்றது. பல்வேறு தரப்பினரிடைய பாராட்டுகளையும் பெற்றது. அது மட்டும் இல்லாமல் அனிருத் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின.நாளையுடன் ஓராண்டை நிறைவு செய்யும் 'ஜெயிலர்'..... இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு வருமா?அடுத்ததாக நெல்சன், ரஜினி கூட்டணியில் ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகப் போவதாக சமீப காலமாக தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனவே ஜெயிலர் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் நாளையுடன் (ஆகஸ்ட் 10) ஜெயிலர் திரைப்படம் ஓராண்டை நிறைவு செய்கிறது. எனவே ஜெயிலர் இரண்டாம் பாகம் தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ