ஜெயிலர் பட நடிகை ஒருவர் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அல்லு அர்ஜுன் கடைசியாக ‘புஷ்பா 2’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து அல்லு அர்ஜுன், அட்லீ இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்க இப்படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்கிறார். சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்படும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று கெட்டப்புகளில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, மிர்ணாள் தாகூர், ஜான்வி கபூர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கி மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்திருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரம் என்ன மாதிரியான கதாபாத்திரம் என்பது போன்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இனிவரும் நாட்களில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தது நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.