spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவசூலில் அடி வாங்கிய 'ப்ளடி பெக்கர்'.... பணத்தை திருப்பிக் கொடுத்த ஜெயிலர் பட இயக்குனர்!

வசூலில் அடி வாங்கிய ‘ப்ளடி பெக்கர்’…. பணத்தை திருப்பிக் கொடுத்த ஜெயிலர் பட இயக்குனர்!

-

- Advertisement -

கவின் நடிப்பில் உருவாகி இருந்த ப்ளடி பெக்கர் கடந்த தீபாவளி தினத்தன்று அக்டோபர் 31ஆம் நாளில் திரையிடப்பட்டது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிவபாலன் இயக்க ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் தனது பிலாமெண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருந்தார். வசூலில் அடி வாங்கிய 'ப்ளடி பெக்கர்'.... பணத்தை திருப்பிக் கொடுத்த ஜெயிலர் பட இயக்குனர்!இந்த படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்ய ஜென்மார்ட்டின் இதற்கு இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் நடிகர் கவின் யாசகராக நடித்திருந்தார். படம் வெளியாவதற்கு முன்பாக படக்குழுவினர் சார்பில் வெளியிடப்பட்ட டீசரும், டிரைலரும் பெற்ற வரவேற்பு படம் வெளியானதற்கு பின்பு படத்திற்கு கிடைக்கவில்லை. எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வசூலிலும் அடி வாங்கியது ப்ளடி பெக்கர். இந்நிலையில் தான் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட்ட பைவ் ஸ்டார் செந்திலுக்கு கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. எனவே அந்த படத்தின் தயாரிப்பாளர் நெல்சன் அந்த நஷ்ட தொகையில் 5 கோடியை திரும்ப அளிப்பதாக உறுதி அளித்திருக்கிறார். வசூலில் அடி வாங்கிய 'ப்ளடி பெக்கர்'.... பணத்தை திருப்பிக் கொடுத்த ஜெயிலர் பட இயக்குனர்!இது விநியோகஸ்தர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. மேலும் நெல்சனின் இந்த செயலுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றனர். அத்துடன் ப்ளடி பெக்கர் திரைப்படம் மற்ற உரிமைகள் திருப்பலையில் லாபத்தை ஈட்டி தந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

MUST READ