Homeசெய்திகள்சினிமா'ஜெயிலர்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘ஜெயிலர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்து தமிழகம் மட்டும் இல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளின் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதன்படி உலகம் முழுவதும் 575 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

இந்நிலையில் இப்படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ