Homeசெய்திகள்சினிமாவிஜய் ரசிகர்கள் அலர்ட் ஆகுங்க.... உங்களுக்கு ஒரு சூப்பர் அப்டேட்!

விஜய் ரசிகர்கள் அலர்ட் ஆகுங்க…. உங்களுக்கு ஒரு சூப்பர் அப்டேட்!

-

- Advertisement -

விஜய் ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான அப்டேட்.

விஜய் ரசிகர்கள் அலர்ட் ஆகுங்க.... உங்களுக்கு ஒரு சூப்பர் அப்டேட்!

விஜயின் 69ஆவது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ஜனநாயகன். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு ஆகிய படங்களை இயக்கிய ஹெச். வினோத் இயக்குகிறார். கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.விஜய் ரசிகர்கள் அலர்ட் ஆகுங்க.... உங்களுக்கு ஒரு சூப்பர் அப்டேட்! அரசியல்வாதியாக மாறி உள்ள விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அதிலும் இந்த படம் அரசியல் கதைக்களம் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் படத்தில் இருந்து வெளியாகும் ஒவ்வொரு போஸ்டர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் தான் சமீபத்தில் ஜனநாயகன் திரைப்படம் 2026 பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.விஜய் ரசிகர்கள் அலர்ட் ஆகுங்க.... உங்களுக்கு ஒரு சூப்பர் அப்டேட்! விஜயின் பெரும்பாலான படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாகி வெற்றி நடை போட்ட நிலையில் இந்தப் படத்தையும் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாட தயாராகி வருகிறார்கள். அதேசமயம் இந்த படத்தின் முதல் பாடல் 2025 ஜூன் மாதம் 22 ஆம் தேதி விஜயின் பிறந்தநாளில் வெளியாகும் என புதிய தகவல் கிடைத்துள்ளன. இந்த தகவல் ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை தந்துள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த பாடலில் அரசியல் சம்பந்தமான வரிகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ