Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவி, நித்யா மேனன் கூட்டணியின் 'காதலிக்க நேரமில்லை'..... ரிலீஸ் எப்போது?

ஜெயம் ரவி, நித்யா மேனன் கூட்டணியின் ‘காதலிக்க நேரமில்லை’….. ரிலீஸ் எப்போது?

-

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக சைரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் ஜீனி, பிரதர் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. அதே சமயம் கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படத்திலும் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.ஜெயம் ரவி, நித்யா மேனன் கூட்டணியின் 'காதலிக்க நேரமில்லை'..... ரிலீஸ் எப்போது?

இதற்கிடையில் ஜெயம் ரவி, வணக்கம் சென்னை, காளி போன்ற படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து யோகி பாபு, ஜான் கொக்கேன், வினோதினி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஜெயம் ரவி, நித்யா மேனன் கூட்டணியின் 'காதலிக்க நேரமில்லை'..... ரிலீஸ் எப்போது?ரொமான்டிக் ட்ராமாவாக உருவாகி வரும் இதன் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விடும் என்று செய்திகள் பரவி வருகின்றன. எனவே இந்த படத்தினை 2024 மே மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவியின் கதாபாத்திரத்தை விட நித்யா மேனனின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

MUST READ