spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெயம் ரவி.... வெளியான புதிய தகவல்!

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெயம் ரவி…. வெளியான புதிய தகவல்!

-

- Advertisement -
kadalkanni

சிவகார்த்திகேயன் படத்தில் நடிகர் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கப் போகிறார் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெயம் ரவி.... வெளியான புதிய தகவல்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி அமரன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்த நிலையில் இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று கிட்டத்தட்ட 300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24 வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதேசமயம் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள இந்த படம் சூர்யா நடிக்க இருந்த புறநானூறு திரைப்படம் தான் என்பது அனைவரும் அறிந்ததே.சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெயம் ரவி.... வெளியான புதிய தகவல்! சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள இந்த படத்தின் தலைப்பு விரைவில் மாற்ற இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்களும் வெளிவந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக நடிகர் அதர்வா நடிக்கப் போகிறார் என்று சொல்லப்பட்டது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரம் வலுவான கதாபாத்திரம் என்றும் அந்த கதாபாத்திரத்தில் பெரிய ஹீரோ ஒருவரையும் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியானது. அதன்படி நிவின் பாலி, பகத் பாஸில் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெயம் ரவி.... வெளியான புதிய தகவல்!இந்நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க நடிகர் விஷாலிடம் கேட்கப்பட்டதாம். விஷால் கதையைக் கேட்ட பின்பு வில்லனாக நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால் 18 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டதாக சொல்லப்படுகிறது. அடுத்தது ஜெயம் ரவியிடம் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் சிவகார்த்திகேயனின் 25 வது படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ