ஜெயம் ரவி நடிக்கும் பிரதர் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஜீனி, காதலிக்க நேரமில்லை போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அடுத்தது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். மேலும் தனி ஒருவன் 2 திரைப்படமும் ஜெயம் ரவியின் லைன் அப்பில் இருந்து வருகிறது. இதற்கிடையில் இவர் எம் ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதில் ஜெயம் ரவியுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சரண்யா பொன்வண்ணன், பூமிகா சாவ்லா, நட்டி நடராஜ், சீதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து மக்கா மிஷி எனும் முதல் பாடல் வெளியாகிய இணையத்தை கலக்கி வருகின்றன. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (செப்டம்பர் 21) சென்னையில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் பட குழுவினர் டீசரை வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான இறைவன், சைரன் போன்ற படங்கள் எதிர்பார்த்து வெற்றியை தரவில்லை. எனவே பிரதர் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.