Homeசெய்திகள்சினிமாஜீவா, அர்ஜுன் கூட்டணியின் புதிய படம்.... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஜீவா, அர்ஜுன் கூட்டணியின் புதிய படம்…. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

ஜீவா, அர்ஜுன் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.ஜீவா, அர்ஜுன் கூட்டணியின் புதிய படம்.... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் ஜீவா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவருடைய நடிப்பில் வெளியான ராம், ஈ, சிவா மனசுல சக்தி போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. அடுத்தது இவரது நடிப்பில் உருவாகியுள்ள பிளாக் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் நடிகர் ஜீவா, பா. விஜய் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஜீவாவுடன் இணைந்து அர்ஜுன், ராஷி கண்ணா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. ஜீவா, அர்ஜுன் கூட்டணியின் புதிய படம்.... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!இந்த போஸ்டரின் மூலம் இந்த படத்திற்கு அகத்தியா என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அடுத்தது இந்த போஸ்டரை பார்க்கும்போது இந்த படம் மர்மமான திரில்லர் கதை களத்தில் உருவாகி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்த போஸ்டரில் இந்த படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ