Homeசெய்திகள்சினிமாஅதிகம் எதிர்பார்க்கப்படும் ஜீவாவின் 'பிளாக்' .... ஓடிடியில் வெளியானது!

அதிகம் எதிர்பார்க்கப்படும் ஜீவாவின் ‘பிளாக்’ …. ஓடிடியில் வெளியானது!

-

- Advertisement -

ஜீவாவின் பிளாக் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.அதிகம் எதிர்பார்க்கப்படும் ஜீவாவின் 'பிளாக்' .... ஓடிடியில் வெளியானது!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜீவா தற்போது பா. விஜய் இயக்கத்தில் உருவாகும் அகத்தியா திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் பிளாக் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கே.ஜி. சுப்ரமணி இயக்கி இருந்தார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஷாம் சி எஸ் இதற்கு இசையமைத்திருந்தார். கோகுல் பினாய் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படத்தில் ஜீவாவுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த அக்டோபர் 11ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. அதிகம் எதிர்பார்க்கப்படும் ஜீவாவின் 'பிளாக்' .... ஓடிடியில் வெளியானது!அதை கடந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று 4வது வாரமாக வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. எனவே இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்திருக்கும் நிலையில் ரசிகர்கள் பலரும் இனிமேல் இந்த படத்தை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ