நடிகர் ஜூனியர் என்டிஆர் ரஜினியின் ஜெயிலர் படம் குறித்து பேசியுள்ளார்.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது. இந்த படத்தில் ரஜினிக்காக அனிருத் கொடுத்திருந்த இசையும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தை நெல்சன் இயக்கியிருந்த நிலையில் அடுத்ததாக ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்நிலையில் ரஜினியின் ஜெயிலர் படம் குறித்து நடிகர் ஜூனியர் என்டிஆர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “இயக்குனர் நெல்சன் மிகவும் திறமையானவர். அவருடைய ஜெயிலர் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ரஜினிகாந்த் சாரை அப்படி பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. ஓ மை காட் செம மாஸ்” என்று தெரிவித்துள்ளார்.
ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள தேவரா பாகம் 1 திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இது தொடர்பான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் தவிர சைஃப் அலி கான், ஜான்வி கபூர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.