Homeசெய்திகள்சினிமாஜெயிலர் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஜூனியர் என்டிஆர்?

ஜெயிலர் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஜூனியர் என்டிஆர்?

-

ஜூனியர் என்டிஆர், ஜெயிலர் பட இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் கூட்டணி அமைக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.ஜெயிலர் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஜூனியர் என்டிஆர்?

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பட்டி தொட்டி எங்கும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அடுத்தது நெல்சன் ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்கப் போவதாகவும் அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது. இந்நிலையில் நெல்சன், ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் புதிய படம் உருவாக இருக்கிறது என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இவர்களின் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்திற்கு அனிருத் இசையமைக்கப் போகிறார் எனவும் சொல்லப்படுகிறது. இயக்குனர் நெல்சன் இயக்கியிருந்த பீஸ்ட் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனாலும் ஜெயிலர் படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார்.ஜெயிலர் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஜூனியர் என்டிஆர்? எனவே ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இவர் இயக்க இருக்கும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் சமீபத்தில் தேவரா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் கிட்டத்தட்ட 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. அதேசமயம் ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் இயக்கத்தில் தனது 31வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். மேலும் வெற்றிமாறன் இயக்கத்திலும் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் ஜூனியர் என்டிஆர்.

MUST READ