Homeசெய்திகள்சினிமாரிலீஸ் தேதியை லாக் செய்த ஜூனியர் என்.டி.ஆர்-ன் 'தேவரா'..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரிலீஸ் தேதியை லாக் செய்த ஜூனியர் என்.டி.ஆர்-ன் ‘தேவரா’….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் தற்போது தேவரா எனும் படத்தில் நடித்து வருகிறார். ரிலீஸ் தேதியை லாக் செய்த ஜூனியர் என்.டி.ஆர்-ன் தேவரா..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!இந்தப் படத்தில் ஜூனியர் என் டி ஆர் உடன் இணைந்து பிரகாஷ்ராஜ், கலையரசன், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் வில்லனாக சைஃப் அலிக்கான் நடிக்கிறார். இதனை கொரட்டலா சிவா இயக்கி வரும் நிலையில் நந்தமுரி தரகா ராமாராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் யுவசுதா ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ரத்தினவேலு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகவும் இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் படத்தின் முன்னோட்ட வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினர். ரிலீஸ் தேதியை லாக் செய்த ஜூனியர் என்.டி.ஆர்-ன் தேவரா..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!இந்நிலையில்தான் சில தினங்களுக்கு முன்பாக இந்த படமானது ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது தேவரா PART 1 திரைப்படம் 2024 அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ