Homeசெய்திகள்சினிமாஉச்சம் தொட்ட கல்கி பட டிக்கெட் விலை... ரூ.2.300-க்கு விற்பனை...

உச்சம் தொட்ட கல்கி பட டிக்கெட் விலை… ரூ.2.300-க்கு விற்பனை…

-

- Advertisement -
 இந்திய சினிமாவில் அடுத்ததாக மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை வெளியாக இருக்கும் பிரம்மாண்ட திரைப்படம் கல்கி 2898 AD. பிரபல தெலுங்கு இயக்குநர் நாக் அஸ்வின் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இதில் பான் இந்தியா நடிகர் பிரபாஸ் நாயகனாக நடிக்க, அவருக்கு வில்லனாக கமல்ஹாசனும், ஜோடியாக தீபிகா படுகோனும் நடித்துள்ளனர். இது தவிர திஷா பதானி, பசுபதி, அன்னா பென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். பிரபல தெலுங்கு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது. சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது. நாளை உலகம் முழுவதும் இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இதற்காக படத்தின் ஆன்லைன் முன்பதிவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கல்கி பட டிக்கெட் விலை சரசரவென உயர்ந்து உச்சம் தொட்டுள்ளது. மும்பை ஜியோ வேர்ல்டு பிளாசாவில் உள்ள திரையரங்கில் கல்கி படத்திற்கான ஒரு டிக்கெட் விலை, சுமார் 2 ஆயிரத்து 300 ரூபாய்க்கும், இதேபோல, LUXE வகை டிக்கெட்டுகள் ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ