spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாடிக்கெட் கட்டணத்தை உயர்த்திய ஆந்திர அரசு... பாதிக்குமா கல்கி பட டிக்கெட் விற்பனை?...

டிக்கெட் கட்டணத்தை உயர்த்திய ஆந்திர அரசு… பாதிக்குமா கல்கி பட டிக்கெட் விற்பனை?…

-

- Advertisement -
kadalkanni
ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் நாளை மறுநாள் வெளியாக உள்ள கல்கி 2898 ஏடி படத்திற்கு காத்திருக்கின்றனர். பான் இந்தியா நடிகர் பிரபாஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு வில்லனாக கமல்ஹாசன் நடிக்கிறார். படத்தை நாக் அஸ்வின் இயக்கி இருக்கிறார். மேலும், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, ரசுபதி, அன்னா பென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இத்திரைப்படம் வரும் ஜூன் 27-ம் தேதி நாளை மறுநாள் திரைக்கு வருகிறது. படத்திற்கான புரமோசன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சமயத்தில் திரைப்படங்களுக்கான டிக்கெட் கட்டண உயர்வை அமல்படுத்தி ஆந்திர மாநில அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சிங்கிள் திரையரங்குகளில் ஒரு டிக்கெட் விலையை 75 ரூபாயும், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 125 ரூபாயும் உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால், ஒரு டிக்கெட் விலை சுமார் 230 ரூபாய் முதல் 320 ரூபாய் வரை விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இரண்டு வாரங்களுக்கு கல்கி படத்திற்கு தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. புதிய கட்டண உயர்வால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருந்தாலும், இந்த திடீர் கட்டண உயர்வால் டிக்கெட் விற்பனை சரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

MUST READ