Homeசெய்திகள்சினிமாமகாபாரதத்தில் இருந்து கதை தொடங்குகிறது..... 'கல்கி' படம் குறித்து இயக்குனர் நாக் அஸ்வின்!

மகாபாரதத்தில் இருந்து கதை தொடங்குகிறது….. ‘கல்கி’ படம் குறித்து இயக்குனர் நாக் அஸ்வின்!

-

சலார் படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் கல்கி 2898AD திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார்.மகாபாரதத்தில் இருந்து கதை தொடங்குகிறது..... 'கல்கி' படம் குறித்து இயக்குனர் நாக் அஸ்வின்! மேலும் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இயக்குனர் நாக் அஸ்வின் இயக்குகிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதைத் தொடர்ந்து க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியானது. மேலும் இப்படம் சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் 2024 மே 9ஆம் தேதி பான் இந்திய அளவில் வெளியாக முழு விச்சில் தயாராகி வருகிறது. மகாபாரதத்தில் இருந்து கதை தொடங்குகிறது..... 'கல்கி' படம் குறித்து இயக்குனர் நாக் அஸ்வின்!அதே சமயம் இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின் கல்கி 2898AD படம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாக் அஸ்வின், ” இந்த படம் மகாபாரதத்தில் இருந்து தொடங்கி 2898 ஆம் ஆண்டில் முடிகிறது. கிட்டத்தட்ட 6 ஆயிரம் ஆண்டுகள் நடக்கும் சம்பவங்களை பற்றி இந்த படம் பேசும். அந்த உலகம் எப்படி இருக்கும் என்பதை கற்பனையாக உருவாக்க முயற்சி செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ