Homeசெய்திகள்சினிமாரஜினியுடன் மோதும் கமல்.... மீண்டும் தள்ளிப்போகும் 'தக் லைஃப்' படத்தின் ரிலீஸ்!

ரஜினியுடன் மோதும் கமல்…. மீண்டும் தள்ளிப்போகும் ‘தக் லைஃப்’ படத்தின் ரிலீஸ்!

-

கமல்ஹாசன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் தக் லைஃப். இந்த படத்தினை மணிரத்னம் இயக்க கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கிறது.ரஜினியுடன் மோதும் கமல்.... மீண்டும் தள்ளிப்போகும் 'தக் லைஃப்' படத்தின் ரிலீஸ்! ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் கமலுடன் இணைந்து சிம்பு, திரிஷா, கௌதம் கார்த்திக், நாசர், அபிராமி, ஐஷ்வர்யா லக்ஷ்மி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதே சமயம் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என சமூக வலைதளங்களில் செய்திகளும் பரவத் தொடங்கியது. அடுத்தது வருகின்ற நவம்பர் 7 ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு தக் லைஃப் படத்தின் டீசர் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.ரஜினியுடன் மோதும் கமல்.... மீண்டும் தள்ளிப்போகும் 'தக் லைஃப்' படத்தின் ரிலீஸ்! ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதிக்கு தள்ளிப் போவதாக புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. எனவே நவம்பர் 7ஆம் தேதி தக் லைஃப் படத்திலிருந்து போஸ்டர் ஒன்று மட்டுமே வெளியாகும் வாய்ப்புள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ரஜினியின் கூலி திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் அதாவது ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. மேலும் யாஷின் டாக்ஸிக், பிரபாஸின் தி ராஜாசாப் போன்ற படங்களும் ஏப்ரல் 10ஆம் தேதி தான் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ