Homeசெய்திகள்சினிமாசிவாஜி இடத்தை நிரப்பக்கூடியவர் தான் கமலஹாசன் - அப்துல் ஹமீத்

சிவாஜி இடத்தை நிரப்பக்கூடியவர் தான் கமலஹாசன் – அப்துல் ஹமீத்

-

- Advertisement -

சிவாஜிக்கு அடுத்தபடியாக அந்த இடத்தை நிரப்பக் கூடியவர் கமலஹாசன். அவர் என் நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைவதாக தொகுப்பாளர் அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார்.

வானொலியை பற்றி “வானலைகளில் ஒரு வழிப்போக்கன்” என்ற நூலை எழுத உதவிய “ஜெய் பீம்” இயக்குனர் த.செ ஞானவேல் அவர்களுக்கு நன்றி என தொகுப்பாளர் அப்துல் ஹமீத் தெரிவித்தார்.

பிரபல தொகுப்பாளர் அப்துல் ஹமீத்தின் “வானலைகளில் ஒரு வழிப்போக்கன்” என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் டிசம்பர் 18 ஆம் தேதி இசை நிகழ்ச்சியோடு நடைபெறுகிறது. இந்நூலை பத்மஸ்ரீ கமலஹாசன் வெளியிட மூத்த பாடகி பி.சுசிலா அவர்கள் பெற்றுக்கொள்கிறார். பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நூல் வாழ்த்துரை வழங்குகிறார். இந்நிலையில் இந்நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

“வானலைகளில் ஒரு வழிப்போக்கன்” என்ற நூல் குறித்து தொகுப்பாளர் அப்துல் ஹமீத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசியவர், ஊடகத்துறையில் அறை நூற்றாண்டை கடந்துள்ளேன். தென் கிழக்கு ஆசியாவின் முதல் வானொலி மையத்தை சார்ந்தவன் நான். இலங்கையில்தான் தென்கிழக்கு ஆசியாவின் முதல் வானொலி மையம் ஆரம்பமானது. 1925 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வளர்ந்து உச்சநிலையை அடைந்தபோது 1967 ஆம் ஆண்டு நான் அங்கு அறிவிப்பாளனாக இணைந்தேன். ஆறு சதாப்தங்களை கடந்துள்ளேன். 11 வயதிலே வானொலி மையத்தில் பணியாற்ற தொடங்கி விட்டேன். வானொலி மையத்தின் வரலாற்றை, என்னுடைய அனுபவங்களை 365 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகமாக எழுதியுள்ளேன் என்றார்.

மார்கோனி இங்கிலாந்திலே 1923 ஆம் ஆண்டு வானொலியை தொடங்கினார். முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட ட்ரான்ஸ்மீட்டர் மற்றும் மைக் தற்போது வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது.

50க்கும் மேற்பட்டவர்கள் வானொலியை கண்டுபிடிக்க ஆராய்ச்சியில் உதவியுள்ளனர். குறிப்பாக இந்தியாவின் ஜெகதீஷ் சந்திர போஸ் உதவியது தான் மார்க்கோனிக்கு வானிலையை ஆரம்பிக்க உதவியது என்ற தகவல் எல்லாம் இங்கிலாந்து சென்றபோது எனக்கு கிடைத்தது. இது போன்ற பல தகவல்களும், வானொலி எப்படி ஆரம்பமானது அதன் பிறகு மூன்றே ஆண்டுக்குள் உலகின் மூன்று நாடுகள் தான் வானொலியை ஆரம்பித்தன இங்கிலாந்தின் “பிபிசி”க்கு அடுத்ததாக ஜப்பான், பெரு,கடைசியாக இலங்கை இதெல்லாம் எப்படி? குறிப்பாக இலங்கையில் வானொலி ஆரம்பமானது எப்படி என்ற தகவல்களை நான் என்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளேன்.
இலங்கையில் முதன் முதலில் வானொலியை அறிமுகப்படுத்தி ஒளிபரப்பியது ஒரு தமிழன் அவரைப் பற்றியும் இந்த நூலில் எழுதியுள்ளேன் என்றார்.

இந்த நூலை வடிவமைக்க நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் தான் உதவினார் அவருக்கு நன்றி. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து என மூன்று நாடுகளில் இந்து நூல் வெளியிடப்பட்டது நான்காவது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வெளியிடப்படுகிறது என்றார். சிவாஜிக்கு அடுத்து அந்த இடத்தை நிரப்பக்கூடியவர் கமல்ஹாசன் தான். அவர் இந்த நூலை வெளியிடுவதில் நான் பெருமை கொள்கிறேன் என்றார்.

இலங்கையில் வானொலியை அறிமுகப்படுத்திய தமிழர் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதா என்ற கேள்விக்கு, ஐயம் பிள்ளை நடராசா என்பவர் தான் இலங்கையில் வானொலியை முதன்முதலாக ஒளிபரப்பினர். அவரை பற்றிய ஆய்வுகளுக்குப் பிறகு நான் எழுதியுள்ளேன் என்றார்.

MUST READ