நடிகர் கமல்ஹாசன், விக்ரம் படத்திற்கு பிறகு இந்தியன் 2, கல்கி 2898AD போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். அதைத்தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மணிரத்னம், கமல் கூட்டணியில் இந்த படம் உருவாகி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அதே சமயம் இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து ஜெயம் ரவி, துல்கர் சல்மான், சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாலும் எதிர்பார்ப்பு மேன்மேலும் அதிகமாகி கொண்டே போகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர் நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுடெல்லியில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் சத்யா பட லுக்கில் தோற்றமளிக்கிறார். மேலும் நடிகை அபிராமி, நாசர், வையாபுரி, சிம்பு உள்ளிட்டோர் கமல்ஹாசன் உடன் இணைந்து இருக்கின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- Advertisement -