Homeசெய்திகள்சினிமாஇந்தியன் 2 படத்தின் வியாபாரம் ஆரம்பம்... கோடிக்கணக்கில் வியாபாரம்...

இந்தியன் 2 படத்தின் வியாபாரம் ஆரம்பம்… கோடிக்கணக்கில் வியாபாரம்…

-

கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் என கொண்டாடப்படுபவர் ஷங்கர். ஜென்டில்மேன் படத்தில் தொடங்கி அவரது பிரம்மாண்டத்தை இன்று வரை ரசிகர்கள் திரையில் பிரம்மித்து பார்க்கின்றனர். பாய்ஸ், சிவாஜி, எந்திரன், முதல்வன் என பல பிரம்மாண்ட படங்களை இயக்கி ஹிட் கொடுத்து கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடிக்க காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானிசங்கர் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

லைக்கா நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்த ஆண்டு இந்தியன் 2 வெளியாக இருக்கிறது. 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியன் 2 ஸ்பெஷல் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்தியன் முதல் பாகத்தில் கமல் நேதாஜி சந்திர போஸ் கெட்டப்பில் இருப்பது போன்று காணப்பட்டார்.

இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் வியாபார பேச்சுவார்த்தைகள் தொடங்கி இருக்கின்றன. தெலுங்கில் மிக முக்கிய வினியோக, நிஜாம் ஏரியாவை, ஏசியன் சுரேஷ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறது. தெலுங்கில் கமலின் திரைப்படம் நேரடியாக வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில்எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இது மட்டுமன்றி திரையரங்கிற்கு பிறகான ஓடிடி விற்பனையில், நெட்பிளிக்ஸ் தளத்திற்கு 220 கோடி ரூபாய்க்கு இந்தியன் 2 விற்கப்பட்டிருக்கிறது.

MUST READ