கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் இந்தியன் 2. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியுள்ளார். லைக்கா நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, எஸ் ஜே சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் போன்றோர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இந்த படம் இன்று (ஜூலை 12) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
இந்த படமானது உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 5000 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 750 திரையரங்குகளில் காலை 9 மணி முதல் திரையிடப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இந்தியன் 2 திரைப்படத்தை காணச் சென்ற ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தை காண திரையரங்கிற்கு சென்றுள்ளார். ஏற்கனவே வெளியான தகவலின் படி நடிகர் கமல்ஹாசன், தொல். திருமாவளவன் உடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படம் பார்க்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தை பார்க்கிறார். இது தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -