தெருநாய்கள் விவகாரத்தில் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.டெல்லியில் கடந்த பல நாட்களுக்கு முன்னர் ஆறு வயது குழந்தை தெரு நாய் கடித்து உயிரிழந்த விவகாரம் அப்பகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே டெல்லியில் இருக்கும் 10 லட்சம் தெரு நாய்களை பிடித்து, அவைகளுக்கு கருத்தடை ஊசி செலுத்தி காப்பகங்களில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பிறகு இந்த விவகாரத்தில் தெரு நாய்களுக்கு ஆதரவாகவும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராகவும் விலங்கின ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே சமயம் சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரை வரை பல பிரபலங்கள் இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என சமூக ஊடகங்களிலும், பேட்டிகளிலும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் தெரு நாய்கள் கடித்து குழந்தைகள் தாக்கப்படும் விவகாரத்தில் நாய் பிரியர்கள் அமைதியாக இருப்பது ஏன்? எனவும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தெருநாய்கள் விவாகரத்தில் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதன்படி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமலிடம் தெரு நாய்கள் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “தீர்வு ரொம்ப சிம்பிள்ங்க. விஷயம் தெரிஞ்சவங்க, உலக சரித்திரம் தெரிஞ்சவங்க, சமூக சுகாதாரம் என்னன்னு தெரிஞ்சவங்க, கழுதை எங்க காணோம் என்று கவலைப்படுகிறார்களா? எல்லா உயிர்களையும் காப்பாற்ற வேண்டும். எவ்வளவு முடியுமோ காப்பாற்ற வேண்டும். அவ்வளவுதான் என்னுடைய கருத்து” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -