spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகம்பேக் கொடுத்தாரா கமல்?.... 'தக் லைஃப்' பட ட்விட்டர் விமர்சனம்!

கம்பேக் கொடுத்தாரா கமல்?…. ‘தக் லைஃப்’ பட ட்விட்டர் விமர்சனம்!

-

- Advertisement -

தக் லைஃப் படத்தின் ட்விட்டர் விமர்சனம்கம்பேக் கொடுத்தாரா கமல்?.... 'தக் லைஃப்' பட ட்விட்டர் விமர்சனம்!

கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படத்திற்கு பிறகு இன்று (ஜூன் 5) உலகம் முழுவதும் தக் லைஃப் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். கமல்ஹாசன் தயாரிக்க ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கமலுடன் இணைந்து சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கின்றனர். நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம் – கமல் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதும் பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணமாகும். இந்நிலையில் இந்த படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் திரையரங்குகளுக்கு திரண்டு வருகின்றனர். அதேசமயம் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் தக் லைஃப் படம் தொடர்பான விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

we-r-hiring

அந்த வகையில் ரசிகர் ஒருவர், “தக் லைஃப் திரைப்படம் முதல் 15 நிமிடங்களில் அருமையான வின்டேஜ் பகுதியுடன் சிறப்பாக தொடங்கியது. சிம்புவின் என்ட்ரி, ஓ மாறா பாடல் ஆகியவை அருமை. கமல்ஹாசனின் ஆக்சன் காட்சிகள், எமோஷனல் காட்சிகள் ஆகியவை படத்தின் தரத்தை உயர்த்துகிறது. கமல்ஹாசனுடனான திரிஷா – அபிராமியின் காட்சிகள் சுவாரசியமாக இருக்கிறது. முதல் பாதியின் நடுவில் சிறிது தொய்வு ஏற்பட்டு இடைவேளை பகுதியை நோக்கி செல்லும் போது கதையின் வேகம் குறைகிறது. ஏ ஆர் ரகுமானின் பின்னண இசை ஓரளவிற்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முதல் பாதி கமல்ஹாசன் – சிம்பு மோதுவதோடு முடிவடைகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகர், “மணிரத்னம் ஸ்டைலில் ஒரு டெம்ப்லேட் கேங்ஸ்டர் படம். கமல்ஹாசன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சிம்புவும் அடித்து நொறுக்குகிறார். ஆரம்பத்தில் வரும் ஃப்ளாஷ்பாக் போர்ஷனில் கமல் – சிம்புவின் இளம் தோற்றம் காட்டப்படுகிறது. கதை மெதுவாக நகர்கிறது. செல்ல செல்ல சில தொய்வுகளும் உள்ளன. ஆனால் படத்தில் சில காட்சிகள் ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது. கமல்- சிம்புவின் மோதல் இன்டர்வெலில் தொடங்குகிறது. இரண்டாம் பாதியில் இது எப்படி மாறும் என்பதை பார்ப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ