நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தனது 69 வயதிலும் ஓய்வில்லாமல் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் கிட்டத்தட்ட 230 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். அதே சமயம் இவர் ஒரு அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார். இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு ,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இன்று (ஜூலை 12) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் சங்கர் இயக்கியுள்ளார். லைக்கா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்க ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி ஏற்கனவே திரையிடப்பட்டு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களும் படத்தைக் காண ஆவலுடன் திரண்டு வந்துள்ளனர்.
மேலும் நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படம் முழுவதையும் இன்று தான் முதன்முதலாக காண இருக்கிறாராம். அதற்காக தனது அரசியல் நண்பர் ஒருவருடன் இணைந்து காண உள்ளாராம். அந்த நண்பர் வேறு யாருமில்லை விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தான். அரசியல் நண்பர்களான கமல்ஹாசன், தொல். திருமாவளவன் இருவரும் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தை காண உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
- Advertisement -