கமல்ஹாசன் சித்தார்த் நடிப்பில் வெளியாக இருக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சித்தார்த் தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ‘பண்ணையாரும் பத்மினியும்’ இயக்குனர் SU அருண் குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார் சித்தார்த்.
இப்படத்தை சித்தார்த் தனது தயரிப்பு நிறுவனத்தில் மூலம் தயாரிக்கிறார். ‘அவள்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’ மற்றும் ‘ஜில் ஜங் ஜக்’ உள்ளிட்ட 3 படங்களை சித்தார்த் ஏற்கனவே தயாரித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நான்காவதாக இந்தப் படத்தை தயாரிக்கிறார். தற்போது இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர். நாளை மாலை 7 மணிக்கு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது.
இதற்கிடையில் நயன்தாரா, மாதவன் நடிப்பில் உருவாகும் டெஸ்ட் படத்திலும் சித்தார்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தயாரிப்பாளர் சஷிகாந்த் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.