நடிகர் கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து கமல், சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்தில் தனது 237 வது திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதற்கிடையில் கமல்ஹாசன், சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஜூலை மாதம் வெளியான நிலையில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் சென்ற ரசிகர்களுக்கு இந்தியன் 2 திரைப்படம் ஏமாற்றத்தை தந்தது. அந்த வகையில் நெட்டிசன்கள் பலரும் இந்த படத்தை கலாய்த்து வந்தனர். இருப்பினும் இந்தியன் 3 பட ட்ரெய்லரை பார்க்கும்போது இந்தியன் 3 திரைப்படம் இந்தியன் 2வை விட நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் கடந்த சில தினங்களாகவே இந்தியன் 3 திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும் 2025 ஜனவரி மாதத்தில் வெளியாகலாம் எனவும் கடந்த சமூக வலைதளங்களில் பல செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இந்தியன் 3 ரிலீஸ் விஷயத்தில் நடிகர் கமல் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது. ஏற்கனவே இந்தியன் 3 படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள் கமல்ஹாசனுக்கு மிகுந்த வருத்தத்தை தந்துள்ளது. ஆகையினால் தன்னுடைய ஒரு வெற்றி படத்திற்கு பிறகு தான் இந்தியன் 3 படத்தை வெளியிட வேண்டும் என சொல்லிவிட்டாராம். இதன்மூலம் இந்தியன் 3 திரைப்படம் தக் லைஃப் படத்திற்குப் பிறகு தான் வெளியாகும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் கமலின் இந்த முடிவிற்கு லைக்கா நிறுவனம் ஒப்புக் கொள்ளுமா? சங்கர் ஒப்புக்கொள்வாரா? போன்ற சந்தேகங்களும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.