Homeசெய்திகள்சினிமாதேசிய விருது வென்ற 'பொன்னியின் செல்வன்'.... வருத்தத்தில் மணிரத்னம்.... ஏன் தெரியுமா?

தேசிய விருது வென்ற ‘பொன்னியின் செல்வன்’…. வருத்தத்தில் மணிரத்னம்…. ஏன் தெரியுமா?

-

இயக்குனர் மணிரத்னம் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராவார். திரைத்துறை குடும்பத்தில் பிறந்த இவருக்கு சிறுவயதில் சினிமாவில் ஆர்வம் இல்லை. ஆனால் நாளடைவில் சினிமா மீது அதீத ஆர்வம் கொண்டு இயக்குனராக முடிவு செய்தார். தேசிய விருது வென்ற 'பொன்னியின் செல்வன்'.... வருத்தத்தில் மணிரத்னம்.... ஏன் தெரியுமா?அதன் பின்னர் பல்லவி அனு பல்லவி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தமிழில் மௌன ராகம், தளபதி, ரோஜா, பம்பாய், நாயகன் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தார். இவ்வாறு இன்று வரையிலும் தமிழ் சினிமாவின் சகாப்தமாக இந்திய சினிமாவின் படைப்பாளியாக வலம் வருகிறார் மணிரத்னம். இவரது இயக்கத்தில் கடைசியாக பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் பொன்னியின் செல்வன் பாகம் 2 ஆகிய திரைப்படங்கள் வெளியானது. அதைத்தொடர்ந்து இவர் தக் லைஃப் எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படமானது நான்கு பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகளை வென்றது. அதாவது சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை மணிரத்னத்திற்கு வழங்கப்பட்டது. தேசிய விருது வென்ற 'பொன்னியின் செல்வன்'.... வருத்தத்தில் மணிரத்னம்.... ஏன் தெரியுமா?சிறந்த இசையமைப்பாளருக்காக விருது ஏ ஆர் ரகுமானுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளருக்காக விருது ரவிவர்மனுக்கும், சிறந்த இசை வடிவமைப்புக்காக ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால் மணிரத்னம் வருத்தத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் தேசிய விருது வென்றதற்காக மிகப்பெரிய நடிகர்கள் யாரும் மணிரத்னத்தை சமூக வலைதளங்கள் போன்ற பொதுவெளியில் வாழ்த்தவில்லை என்று வருத்தப்படுகிறாராம் மணிரத்னம். அத்துடன் தெலுங்கு திரைத்துறையில் இது போன்ற விருதுகள் யார் வென்றாலும் அனைவரும் திரண்டு வந்து வாழ்த்து கூறுவர் என்றும் தெலுங்கு திரை உலகைப் போல தமிழ் திரை உலகில் இல்லை என்றும் மணிரத்னம் வருத்தமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

MUST READ