Homeசெய்திகள்சினிமாதள்ளிப்போன 'கங்குவா' ஆடியோ லான்ச்.... சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?

தள்ளிப்போன ‘கங்குவா’ ஆடியோ லான்ச்…. சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?

-

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. தள்ளிப்போன 'கங்குவா' ஆடியோ லான்ச்.... சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?அதன்படி படக்குழுவினர் இந்த படத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார்.
3D தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் படத்திலிருந்து வெளியாகும் ஒவ்வொரு போஸ்டர்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் இந்த படத்தின் ட்ரெய்லர் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அடுத்தது இந்த படத்தில் இருந்து இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் இரண்டாவது பாடல் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் எனவும் இதன் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. தள்ளிப்போன 'கங்குவா' ஆடியோ லான்ச்.... சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்தின் இரண்டாவது பாடல் அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 26ஆம் தேதி நடைபெறும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ரெபல் ஸ்டார் பிரபாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. ஆகையினால் வருகின்ற அக்டோபர் 19 அல்லது 20ஆம் தேதி படத்திலிருந்து மிகப்பெரிய அப்டேட் வெளிவரும் என்று நம்பப்படுகிறது.

MUST READ