Homeசெய்திகள்சினிமாஇன்று வெளியாகிறது 'கங்குவா' படத்திலிருந்து 'தலைவனே' பாடல்!

இன்று வெளியாகிறது ‘கங்குவா’ படத்திலிருந்து ‘தலைவனே’ பாடல்!

-

கங்குவா படத்தில் இருந்து தலைவனே பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இன்று வெளியாகிறது 'கங்குவா' படத்திலிருந்து 'தலைவனே' பாடல்!

சூர்யா நடிப்பில் மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாக்கி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. 3D தொழில்நுட்பத்தில் பீரியாடிக் கதைக்களத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். படத்தில் சூர்யா தவிர திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, நட்டி நடராஜ், பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது ப்ரோமோஷன் பணிகள் மும்பை, டெல்லி, ஐதராபாத் போன்ற பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இன்று வெளியாகிறது 'கங்குவா' படத்திலிருந்து 'தலைவனே' பாடல்!இதற்கிடையில் இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி எதிர்பார்ப்பை ஏக்கச்சக்கமாக அதிகப்படுத்தியது. மேலும் படத்தில் இருந்து முதல் இரண்டு பாடங்களும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அடுத்தது இந்த படத்தில் இருந்து தலைவனே எனும் புதிய பாடல் இன்று (அக்டோபர் 29) மாலை 6 மணி அளவில் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ