கங்குவா படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன், விக்ரம் ஆகிய படங்களுக்குப் பிறகு கங்குவா எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, கோவை சரளா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க பாபி தியோல் படத்தில் வில்லனாக நடிக்கிறார். இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் கங்குவா படத்தின் முதல் பாகத்தின் இறுதியில் நடிகர் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் தோன்று இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கங்குவா இரண்டாம் பாகத்தில் கார்த்தி தான் வில்லன் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே இப்படமானது மிகப் பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி இருக்கும் நிலையில் கார்த்தி இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தியுள்ளது. எனவே வருகின்ற அக்டோபர் 10 அன்று கங்குவா திரைப்படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் படத்தின் முன்னோட்ட வீடியோ, டீசர், முதல் பாடல் என அடுத்தடுத்து வெளியாகி கவனம் பெற்றது. அடுத்ததாக இந்த படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 12 இயக்குனர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா ட்ரெய்லர் வெளியாகும் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவாவிற்கு ஆரம்பத்தில் பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தாலும் கடைசியாக இவர் இயக்கியிருந்த அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. எனவே கங்குவா திரைப்படம் இவருக்கு சிறந்த கம்பேக் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது