spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரசிகர்களை கவர்ந்ததா 'காந்தாரா சாப்டர் 1'?.... ட்விட்டர் விமர்சனம்!

ரசிகர்களை கவர்ந்ததா ‘காந்தாரா சாப்டர் 1’?…. ட்விட்டர் விமர்சனம்!

-

- Advertisement -

காந்தாரா சாப்டர் 1 படத்தின் ட்விட்டர் விமர்சனம்.ரசிகர்களை கவர்ந்ததா 'காந்தாரா சாப்டர் 1'?.... ட்விட்டர் விமர்சனம்!

ரிஷப் ஷெட்டியின் இயக்கத்திலும் நடிப்பிலும் ‘காந்தாரா’ திரைப்படம் வெளியாகி உலக அளவில் அதிக வசூலை வாரிக் குவித்தது. அதைத்தொடர்ந்து ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த படம் இன்று (அக்டோபர் 2) பல்வேறு மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. இதில் ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து ருக்மினி வசந்த், ஜெயராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி உள்ள இந்த படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் திரையரங்கிற்கு திரண்டு வருகின்றனர். அதே சமயம் இந்த படம் தொடர்பான தங்களின் கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

we-r-hiring

அதன்படி ரசிகர் ஒருவர், “காந்தாரா சாப்டர் 1 படம் அருமையாக மேக்கிங் செய்யப்பட்டுள்ளது. விஎஃப்எக்ஸ் பணிகள் சிறப்பாக அமைந்துள்ளது. படத்தின் ஆரம்ப பகுதிகளும், இடைவேளையும் சூப்பர்” என்று குறிப்பிட்டு தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு ரசிகர், “ரிஷப் ஷெட்டி டாப் நாட்ச் பெர்ஃபார்மன்ஸை கொடுத்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸின் 20 நிமிடங்கள் அருமை. ருக்மினிக்கு வலுவான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அஜீனிஸ் லோக்நாத்தின் பின்னணி இசை படத்தின் முதுகெலும்பாக இருக்கிறது. முதல் பாதி சராசரியாக இருக்கிறது. இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது. இன்டர்வெல் சண்டைக்காட்சி, குலிகா தொடர், கிளைமாக்ஸ் ஆகியவை அருமை. பார்க்கத் தகுந்த படம்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒரு ரசிகர், “தெய்வீக சினிமா, கூஸ்பம்ப்ஸ் அனுபவம். ரிஷப் ஷெட்டி ஒவ்வொரு ஃப்ரேமையும் சொந்தமாக்கி கொள்கிறார். அவருடைய உருமாற்றம், கிளைமேக்ஸ் ஆகியவை திரையரங்கையே அதிரச் செய்கிறது. ருக்மினி வசந்த் காட்சிகள் சர்ப்ரைஸான பகுதி. அஜீனிஸ் லோக்நாத்தின் பின்னணி இசை படத்தின் ஆன்மா. மொத்தத்தில் இது வெறும் படம் இல்லை. இது ஒரு தூய தெய்வீக பயணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ