கமல்ஹாசனுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிப்பு ஜாம்பவானான கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து வருகின்ற ஜூன் மாதம் 5ஆம் தேதி தக் லைஃப் திரைப்படம் வெளியாக இருக்கிறது. கமல்ஹாசனின் 234 வது படமான இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்க மணிரத்னம் இயக்கியிருக்கிறார். இதில் சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், அசோக் செல்வன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படமானது மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவராஜ்குமார், கமலை தனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது பற்றி பேசினார். அதேசமயம் கமல்ஹாசன், சிவராஜ்குமார் பற்றி பேசும் போது, “சிவராஜ்குமார் இன் தந்தை ராஜ்குமாரிடம் இருந்துதான் நான் பணிவை கற்றுக் கொண்டேன். இவரை அனைவரும் சிவண்ணா என்று அழைக்கிறார்கள். ஆனால் நான் அவருக்கு சித்தப்பா முறை. அவர் கன்னட சூப்பர் ஸ்டார். ஆனால் உங்கள் பிரதிநிதியாக என் ரசிகனாக இங்கு வந்திருக்கிறார். இது அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் உயிரே, உறவே, தமிழே என பேச ஆரம்பித்தேன். தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் பாஷையும். எனவே நீங்களும் அதில் அடங்குவீர்கள்” என்று தெரிவித்திருந்தார்.

கமல்ஹாசனின் இந்த பேச்சு கர்நாடகாவில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவின் பல்வேறு அரசியல் கட்சியினரும் கமலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தக் லைஃப் பட போஸ்டர்களை கிழித்து, படத்தை தடை செய்ய கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில்