spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசூர்யாவின் 'புறநானூறு' படத்தில் இணையும் கார்த்தி பட நடிகை!

சூர்யாவின் ‘புறநானூறு’ படத்தில் இணையும் கார்த்தி பட நடிகை!

-

- Advertisement -

சூர்யாவின் 'புறநானூறு' படத்தில் இணையும் கார்த்தி பட நடிகை!நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வரலாற்று சரித்திர படமாக உருவாகி வரும் இந்த படம் 3D தொழில்நுட்பத்தில் மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த பொருட்செலவிலும் தயாராகி வருகிறது.

இதைத்தொடர்ந்து சூர்யா தனது 43 வது படத்தில் நடிக்க இருக்கிறார். அதன்படி கடந்த 2020ல் வெளியான சூரரைப் போற்றும் படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் சூர்யா. புறநானூறு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சூர்யா இந்தி திணிப்பை எதிர்க்கும் கல்லூரி மாணவனாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசை அமைக்க இருக்கிறார். சூர்யாவின் 'புறநானூறு' படத்தில் இணையும் கார்த்தி பட நடிகை!இதன் படப்பிடிப்புகள் 2024 பிப்ரவரி மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. மேலும் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். மேலும் இதன் கூடுதல் தகவலாக நடிகை அதிதி சங்கர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சூர்யாவின் 'புறநானூறு' படத்தில் இணையும் கார்த்தி பட நடிகை!

we-r-hiring

நடிகை அதிதி சங்கர் கார்த்தியின் விருமன் திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ