நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடந்த மே 1 அன்று உலகம் முழுவதும் ரெட்ரோ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்திருந்தார். கார்த்திக் சுப்பராஜ் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் சூர்யா ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.
அதிலும் படத்தில் இடம்பெற்ற கனிமா பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் சூர்யா – பூஜா ஹெக்டேவின் காதல் காட்சிகளும் ஒர்க் அவுட் ஆகிய உள்ளன. சமீபத்தில் இந்த படம் உலக அளவில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், படம் வெளியான முதல் நாளிலிருந்தே ஒவ்வொரு திரையரங்கிற்கும் சென்று ரசிகர்களுடன் படத்தை கண்டு களித்து வருகிறார்.
#KarthikSubbaraj About the Hatred on #Suriya ..🤝:
pic.twitter.com/tNGZkNrPnX— Laxmi Kanth (@iammoviebuff007) May 12, 2025
அப்போது ரசிகர் ஒருவர் கார்த்திக் சுப்பராஜிடம், “சூர்யா சார் மேல ஏன் இவ்வளவு வன்மம். அவர் மக்களுக்காக எவ்வளவு உதவி பண்ணுகிறார். ஆனால் அவருடைய படங்கள் வெளியாகும் போதெல்லாம் ஏன் இவ்வளவு வெறுப்பை பரப்புகிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு கார்த்திக் சுப்பராஜ், “சூர்யா சார் பெயர் சொன்னதுக்கே எவ்வளவு பவருன்னு பாருங்க. இதெல்லாம் தூசி மாதிரி விட்டு தள்ளுங்க” என்று பதிலளித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இந்த பதிலை கேட்ட பலரும் கைதட்டி ஆரவாரம் எழுப்பினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.