இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ரெட்ரோ படம் குறித்து பேசி உள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ரெட்ரோ. இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனமும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்துள்ளார். இதில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். காதல் கலந்த ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகளும் மற்ற ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்திலிருந்து ட்ரெய்லர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. எனவே நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் இந்த படம் குறித்து கார்த்திக் சுப்பராஜ், சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.
Dir #KarthikSubbaraj Recent
– This is not a #Retro gangster film, it is a love story.
– This is a love story between a men and a women, in a story I have never done before.
-“Mahaan” is not a gangster story either.#Suriya
pic.twitter.com/Jl9obauu9T— Movie Tamil (@MovieTamil4) April 21, 2025
அதன்படி அவர், “ரெட்ரோ திரைப்படம் கேங்ஸ்டர் படம் இல்லை. இது ஒரு காதல் கதை. இதை நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன். இது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான காதல் கதை. ஆனால் இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் நிறைய இருக்கும். நான் இதுவரை பண்ணாத கதை இது” என்று தெரிவித்துள்ளார்.