Homeசெய்திகள்சினிமா'கங்குவா' படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்...... கார்த்திக் சுப்பராஜ்!

‘கங்குவா’ படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்…… கார்த்திக் சுப்பராஜ்!

-

- Advertisement -

சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் கங்குவா எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார். 'கங்குவா' படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்...... கார்த்திக் சுப்பராஜ்!வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். 3D தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு விதமான தோற்றங்களில் நடித்திருக்கிறார். அதன்படி இந்த படம் பீரியாடிக் கதைக்களத்தில் மிகவும் பிரம்மாண்டமாக ஹை பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் சூர்யாவின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமையும் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் சூர்யா இந்த படத்திற்காக மிகவும் கடினமாக உழைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கத்தில் (அக்டோபர் 26) மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டிருக்கும் நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், கங்குவா படம் குறித்து பேசி உள்ளார்.'கங்குவா' படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்...... கார்த்திக் சுப்பராஜ்! அவர் பேசியதாவது, “சூர்யா சார், ஞானவேல் சார் ஆகியோர் கங்குவா படத்தை பற்றி பேசிய விதமே என் ஆர்வத்தை தூண்டியது. சில மாதங்களுக்கு முன்னர் ஞானவேல் சாரை சந்தித்தபோது இரண்டு நிமிட காட்சிகளை என்னிடம் காட்டினார். அதை பார்த்து மிரண்டு போய்விட்டேன். உண்மையில் சிவா சார் திறமையானவர். இது மிகவும் முக்கியமான படம். இந்த படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக தான் நான் பார்க்கிறேன். படம் பண்ண வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லோருக்குமே இந்த படம் இன்ஸ்பிரேஷனாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ