கவின், ஆண்ட்ரியா நடிக்கும் மாஸ்க் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
கவின் நடிப்பில் கடைசியாக ப்ளடி பெக்கர் எனும் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் கவின் நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் கிஸ் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படம் வருகின்ற மார்ச் மாதம் திரைக்கு வர இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் நயன்தாராவுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் கவின். இதற்கிடையில் இவர் நடிக்கும் திரைப்படம் தான் மாஸ்க். இந்தப் படத்தை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். அறிமுகம் இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். இந்த படத்தில் கவின் உடன் இணைந்து ருஹானி ஷர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை ஆண்ட்ரியா இப்படத்தில் வில்லியாக நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை 2025 கோடையில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.