spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகவின் நடிப்பில் உருவாகும் 'பிளடி பெக்கர்'.... ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?

கவின் நடிப்பில் உருவாகும் ‘பிளடி பெக்கர்’…. ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

கவின் நடிப்பில் உருவாகும் பிளடி பெக்கர் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.கவின் நடிப்பில் உருவாகும் 'பிளடி பெக்கர்'.... ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?

நடிகர் கவின் சின்னத்திரையில் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர். அப்பொழுதே ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்த நடிகர் கவின் வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான டாடா திரைப்படம் நடிகர் கவினுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதைத்தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி நடித்த வருகிறார் கவின். அந்த வகையில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பிளடி பெக்கர். இந்த படத்தினை ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் தனது பிலாமென்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கிறார். இதனை அறிமுக இயக்குனர் சிவபாலன் இயக்கியுள்ளார். ஜென் மார்ட்டின் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் கவின் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.கவின் நடிப்பில் உருவாகும் 'பிளடி பெக்கர்'.... ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், முதல் பாடல் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அடுத்ததாக இந்த படத்தின் டிரைலர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அடுத்த வாரம் பிளடி பெக்கர் படத்தின் டிரைலர் வெளியாகும் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ