Homeசெய்திகள்சினிமா'ஜென்டில் மேன் 2' படத்திற்காகவும் கீரவாணி இன்னொரு ஆஸ்கர் வாங்குவார்... வைரமுத்து நெகிழ்ச்சி!

‘ஜென்டில் மேன் 2’ படத்திற்காகவும் கீரவாணி இன்னொரு ஆஸ்கர் வாங்குவார்… வைரமுத்து நெகிழ்ச்சி!

-

இயக்குனர் சங்கர் ஜென்டில்மேன் படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தை கேடி குஞ்சுமோன் தயாரித்திருந்தார். தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் ஜென்டில் மேன் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தையும் குஞ்சுமோன் தான் தயாரிக்கிறார். படத்திற்கு எம்எம் கீரவாணி இசை அமைக்கிறார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

அதில் பேசிய வைரமுத்து,

“தயாரிப்பாளர் குஞ்சுமோன் 33 வருடமாக திரைஉலகில் ஒரு தலைமுறையை கடந்துவிட்டார். இத்தனை வருடங்களில் அவர் பட்ட துன்பங்கள் வேறு ஒரு மனிதனுக்கு நேர்ந்திருந்திருந்தால் ஒன்று அவன் துறவியாக சென்று இருப்பான். இல்லை அரசியல்வாதியாகி இருப்பான். ஆனால் குஞ்சுமோன் மீண்டும் படம் எடுத்து வெற்றிக்கொடி நாட்டுவேன் என்கிற இலட்சியத்துடன் வந்துள்ளார்.

ஒரு தலைமுறையில் ஒரு வெற்றி பெற்றவர், இந்த இரண்டாவது தலைமுறையில் இரண்டு மடங்கு வெற்றி பெறுவேன் என்றுதான் ஜென்டில்மேன் 2 என தலைப்பு வைத்துள்ளார்.

இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர் ஒரு புதிய இசையமைப்பாளரை அறிமுகம் செய்ய வேண்டுமென ஆசைப்பட்டபோது தனக்கு தோதான தன்னை புரிந்து கொண்டு, தன்னுடைய உயரத்திற்கு தன்னுடன் இணைந்து பயணிக்கின்ற ஒரு நபர் வேண்டும் என்று கேட்டபோது எஸ்.பி.பாலசுப்ரமணியம் கைகாட்டிய ஒரே நபர் இசையமைப்பாளர் கீரவாணி தான். அப்படி தன்னிடம் வந்த கீரவாணியைத்தான் மரகதமணி என்று பெயர் மாற்றி என்னிடம் ஒப்படைத்தார் பாலச்சந்தர்.

ஜென்டில்மேன் என குஞ்சுமோனுக்கு அடுத்ததாக நான் கருத வேண்டியவர் கீரவாணி தான். ஆஸ்கர் விருது கீரவாணியிடம் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. ஆனால் ஆஸ்கர் விருது வாங்கிய பிறகு அதிகம் உழைத்தாக வேண்டும். இல்லையென்றால் இவருக்கா ஆஸ்கர் விருது கொடுத்தார்கள் என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். நிச்சயமாக இந்த படத்திற்கும் கீரவாணிக்கு ஒரு ஆஸ்கர் விருது கிடைக்கும்” என்றார்

MUST READ