spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'ஜென்டில்மேன் 2' படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு!

‘ஜென்டில்மேன் 2’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியீடு!

-

- Advertisement -

ஜென்டில்மேன் 2 படத்தின் டைட்டில் லுக் வெளியாகி உள்ளது.

கடந்த 1993 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜென்டில்மேன். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சமீபத்தில் இந்த படம் 30 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தது. அதனை இயக்குனர் சங்கர் கேக் வெட்டி கொண்டாடியிருந்தார்.

we-r-hiring

தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் ஜென்டில்மேன் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இதனை முதல் பாகத்தை தயாரித்த குஞ்சு மோகன் ஜென்டில்மேன் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் இரண்டாவது பாகத்தையும் தயாரிக்கிறார். படத்திற்கு எம் எம் கீரவாணி இசை அமைக்கிறார்.

தற்போது இந்த படத்தின் டைட்டில் லுக் மோஷன் போஸ்டரை படக்குழுவினர்  வெளியிட்டுள்ளனர். CONFIDENCE IS OUR TRADEMARK என்று அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

MUST READ