spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகேரள பெண்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பிரதிநிதியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்

கேரள பெண்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பிரதிநிதியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்

-

- Advertisement -

கேரள பெண்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பிரதிநிதியாக நடிகை கீர்த்தி சுரேஷை, கேரள கிரிக்கெட் சங்கம் நியமித்துள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நல்ல வரவேற்பு பெறும் நடிகையாக உருவெடுத்துள்ளார். நடிகை என்றாலே காதல், கல்யாணம் உள்ளிட்ட கிசுகிசுக்களுக்கு ஆளாகாமல் இருக்க முடியுமா என்ன? கீர்த்தி சுரேஷும் அதற்கு விதிவிலக்கல்ல.

we-r-hiring
இடையில் கூட அனிருத்துடன் கீர்த்தி டேட்டிங் செய்து வருவதாக பல செய்திகள் வெளியாகி பின்னர் அதை மறுக்கப்பட்டது. அவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் மாமன்னன். உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக இப்படத்தில் அவர் நடித்திருப்பார். அவரது நடிப்பில் ரகு தாத்தா படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்துள்ளது.

இந்நிலையில், கேரள பெண்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பிரதிநிதியாக நடிகை கீர்த்தி சுரேஷை, கேரள கிரிக்கெட் சங்கம் நியமித்துள்ளது. ஜெர்சியை அணிந்துகொண்டு கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

MUST READ