‘கேஜிஎப்’ ஹீரோ யாஷ், பெண் இயக்குனர் ஒருவர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகை மற்றும் இயக்குனராக வலம் வருபவர் கீத்து மோஹன்தாஸ். அவர் தமிழில் ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மாதவன் நடிப்பில் வெளியான ‘நளதமயந்தி’ படத்தில் கதாநாயகி நடித்தார்.

பின்னர் மலையாளத்தில் ‘லயர் டயஸ்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். இயக்குனர் ஆன முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். நிவின் பாலியை வைத்து ‘மூத்தோன்’ படத்தை இயக்கினார்.
இந்நிலையில் கீத்து மோகன்தாஸ் யாஷ் நடிப்பில் புதிய படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் யாஷை சந்தித்து கதை ஒன்றை கூறியதாகவும், யாஷ் அந்தக் கதையில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கேஜிஎப் படத்தை அடுத்து யாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்திய அளவில் அவரின் அடுத்த படத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். எனவே கூடிய விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.