இயக்குனர் பி.எஸ். வினோத் ராஜ் கூழாங்கல் எனும் திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இந்த படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றது. அதைத்தொடர்ந்து இவர் இயக்கியிருந்த திரைப்படம் தான் கொட்டுக்காளி. இந்த படத்தினை சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருந்தார். சூரி மற்றும் அன்னா பென் ஆகியோர் இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் பெண் அடக்குமுறை, சாதியம், மூடநம்பிக்கைகள், சமமற்ற தன்மை போன்ற அனைத்தும் காட்டப்பட்டுள்ளது. அதிலும் அந்தப் பெண்ணையும் சேவல் ஒன்றையும் ஒற்றுமைப்படுத்தி காட்டியிருந்தார் இயக்குனர் பி.எஸ். வினோத் ராஜ். இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களை கவர்ந்தது. அதே போல் தற்போது ரிலீஸுக்கு பிறகும் ரஷ்யாவில் நடைபெற்ற ‘Amur Autumn’ சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரைப்படம் திரையிடப்பட்டு கிராண்ட் பிரிக்ஸ் என்ற விருதினை வென்று சாதனை படைத்துள்ளது. அப்பொழுது இந்த விருதை பெறுவதற்காக மேடை ஏறிய இயக்குனர் பி எஸ் வினோத்ராஜ் தனது தாய் மொழியான தமிழ் மொழியில் பேச விரும்புவதாக தெரிவித்தார்.
அப்பொழுது பேசிய அவர், “இந்த விருது முக்கியமான தருணத்தில் எனக்கு கிடைத்திருக்கிறது. இதை நான் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், துணை தயாரிப்பாளர் கலை, நடிகர் சூரி, அன்னா பென், எப்பொழுதும் என்னை விட்டுப் போகாத என்னுடைய குழு மேலும் திரைப்படத்திற்கு பலமாக இருந்த அனைவருக்கும் என்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருது வென்ற ‘கொட்டுக்காளி’….. சர்வதேச மேடையில் தமிழில் உரையாடிய இயக்குனர்!
-
- Advertisement -